87 ஹெக்டேர் பரப்பளவு.., 40 பேர் கொண்ட ஒரே ஒரு குடும்பம் வாழும் இந்திய கிராமம் எது?
87 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த கிராமத்தில், 40 பேர் கொண்ட ஒரே ஒரு குடும்பம் மட்டுமே உள்ளது.
எந்த மாநிலம்?
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள ராஞ்சியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ரானியா தொகுதியில் செங்ரே என்ற ஒரு கிராமம் உள்ளது.
ஆனால் இங்கு ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கிறது. செங்ரேவின் மொத்த மக்கள்தொகையும் 40 உறுப்பினர்களைக் கொண்டது.

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள்
வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாததால் மற்ற குடும்பங்கள் பல ஆண்டுகளாக கிராமத்தை விட்டு வெளியேறின.
ஆனால் அங்கு எளிமையான வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியாக இருப்பதாக குடும்பத்தின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
"நாங்கள் இங்கே அமைதியாக வாழ்கிறோம். பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளை மேய்க்கிறோம். பால், ஆடுகளை விற்பனை செய்வதன் மூலமும், சிறிது விவசாயம் செய்வதன் மூலமும், எங்கள் வாழ்க்கை நன்றாக செல்கிறத," என்று குடும்ப உறுப்பினரான சுதேஷ் என்பவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
இவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பொது விநியோக முறை (PDS) மற்றும் குழந்தைகளுக்கான இலவச கல்வி வசதிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதாக ரானியா தொகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |