ஒரு பழத்தின் விலை ரூ. 50,000.., உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் எது தெரியுமா?
பொதுவாக, பழங்கள் சுவையானவை மற்றும் சத்துக்கள் நிறைந்தவை.
உடலுக்கு உடனடியாக ஆற்றலையும், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
அந்தவகையில், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் யூபரி முலாம்பழம் அல்லது யூபரி தர்பூசணி ஆகும்.

இந்த தர்பூசணி ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள யூபரி நகரில் விளைகிறது.
உலகின் தர்பூசணிகளின் ராஜா என்று அழைக்கப்படும் யூபரி தர்பூசணியை வளர்க்க அதிக கவனம் தேவை.
இதன் உட்பகுதி ஆரஞ்சு நிறத்திலும், வெளிப்பகுதி பச்சை நிறத்திலும் இருக்கும். மேலும், அதன் தோலில் வெள்ளை நிற கோடுகள் காணப்படும்.

ஒரு கிலோ யூபரி தர்பூசணியின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக, ஒரு தர்பூசணியின் சராசரி எடை 2.5 முதல் 3 கிலோ வரை இருக்கும்.
இந்நிலையில், ஒரு யூபரி தர்பூசணியின் விலை சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |