இந்திய ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் ரயில் எது தெரியுமா?
இந்திய ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் ரயில் எது என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக வருமானம்
1853 இல் நிறுவப்பட்ட இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இது நாடு முழுவதும் பரவி பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. இந்த நெட்வொர்க் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இரண்டையும் வழங்குகிறது.
பயணிகள் சேவைகளில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற விரைவு ரயில்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சேவைகளை வழங்குகின்றன.
இந்திய இரயில்வே தனது வருவாயில் கணிசமான பகுதியை சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டுகிறது. ஆனால் டிக்கெட் விற்பனை ஒரு முக்கியமான வருமான ஆதாரமாக உள்ளது.
சராசரியாக 46% தள்ளுபடியில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டாலும், ரயில்வே அமைப்பு அனைத்து பயணிகளுக்கும் ஆண்டுதோறும் மொத்தம் ரூ.56,993 கோடி மானியங்களை வழங்குகிறது.
இந்திய இரயில்வேயின் வருவாயில் முக்கியப் பங்காற்றுவது பெங்களூரு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகும். இது 1969 இல் தொடங்கப்பட்டது.
இந்த ரயிலானது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் ஆகியவற்றிற்கு இடையே இயக்கப்படுகிறது.
இந்த பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் 2022-23 நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயிலாகும். இந்திய ரயில்வேயின் தரவுகளின்படி, 509,510 பயணிகளை ஏற்றிக்கொண்டு ரூ.1,760.67 கோடியை ஈட்டியுள்ளது.
மற்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களும் வருவாயில் கணிசமாக பங்களிக்கின்றன. டெல்லி மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 2022-23 ஆம் ஆண்டில் 509,164 பயணிகளைக் கொண்டு ரூ.1,288.17 கோடி ஈட்டியுள்ளது.
இதேபோல, திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், டெல்லி மற்றும் அசாமின் திப்ருகர் இடையே இயக்கப்பட்டு, அதே நிதியாண்டில் 4,74,605 பயணிகளுடன் ரூ.1,262.91 கோடியை ஈட்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |