அம்பானியின் ஆன்டிலியாவை விட பல மடங்கு பெரிய வீடு.., இந்தியாவில் எங்கு உள்ளது?
இந்தியாவின் ஆடம்பரமான வீடுகள் என்று கூறும்போது, முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் இல்லம் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா அல்ல.
குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றாகும்.

முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா சுமார் 1.12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை சுமார் 1890ஆம் ஆண்டு கெய்க்வாட் அரச குடும்பத்தினருக்காக கட்டப்பட்டது.
இந்திய பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை பரோடா சமஸ்தானத்தை ஆட்சி செய்த கெய்க்வாட் குடும்பத்தின் முக்கிய இல்லமாக இருந்தது.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் 170க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் பெரிய தோட்டங்கள், குதிரைகளுக்கான லாயங்கள், நீச்சல் குளம், தனிப்பட்ட கோல்ஃப் மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

அரண்மனையின் ஒரு பகுதியில் கெய்க்வாட் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மற்றொரு பகுதி அருங்காட்சியகமாக பயன்படுத்தப்படுகிறது.
கெய்க்வாட் குடும்பம் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 1947ஆம் ஆண்டு வரை பரோடா சமஸ்தானத்தை ஆட்சி செய்தது.
இந்த அரண்மனையில் கெய்க்வாட் அரச குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

தற்போது மகாராஜா சமர்ஜித் சிங் ரஞ்சித் சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ராதிகாராஜே கெய்க்வாட் ஆகியோர் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரம்மாண்டமான கட்டிடக்கலை, பெரிய தோட்டங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கலைப்பொருட்கள் காரணமாக லக்ஷ்மி விலாஸ் அரண்மனை வதோதராவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |