கார் லோன் வாங்குவதற்கு சிறந்த வங்கி எது? குறைவான வட்டி எதில் வழங்கப்படுகிறது?
கார் லோன் வாங்குவதற்கு சிறந்த வங்கி எது என்பதையும், எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதம் உள்ளது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் கார் இருக்கிறது. காரை வாங்குவதற்கு லோன்கள் எளிதாக கிடைக்கிறது. இந்த பதிவில் குறைவான வட்டியில் கார் கடன் வழங்கும் முன்னணி வங்கிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
UCO வங்கி (UCO Bank)
UCO Bank -ல் புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.70 சதவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.60 சதவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
Union Bank of India வங்கியில் புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.80 சதவிகிதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.70 சதவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
கனரா பேங்க் (Canara Bank)
Canara Bank-ல் புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.75 சதவிகிதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.70 சதவிகிதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra)
Bank of Maharashtra வங்கியில் கார் வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.70 சதவிகிதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)
Punjab National Bank -ல் புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல் வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.80 சதவிகிதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்கு ஆண்டுக்கு 8.75 சதவீதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
Bank of Baroda வங்கியில் கார் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதத்தில் தொடங்கி 12.65 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)
State Bank of India வங்கியில் புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல் வாங்குவதற்கு ஆண்டுக்கு 9.15 சதவீதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் வாங்குவதற்கு ஆண்டுக்கு 9.05 சதவீதத்தில் இருந்து கடன் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |