2022இல் பிரான்சில் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது?: ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
பிரான்ஸ் நாட்டில் அதிகம் பிரபலமான நகரம் என்றால், அது தலைநகரமான பாரீஸ் என்று பலரும் சட்டென்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால், வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்று கேட்டால், வேறு மாதிரி விடை கிடைத்திருக்கிறது.
ஆம், பிரான்சில் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்பதை அறிவதற்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Meteo Job மற்றும் Meilleurtaux என்ற இரண்டு அமைப்புகள் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. வேலையில் ஸ்திரத்தன்மை மற்றும் வீடு வாங்கும் திறன் (job security and the affordability of housing) ஆகியவை இந்த ஆய்வுக்கான காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்வின் முடிவு ஆச்சரியத்துக்குரிய விடயங்களை வெளிக்கொணர்ந்தது. ஆம், அதிகம் வெளியில் பேசப்படாத நகரங்கள் பிரான்சில் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டிலில் முதலிடம் பிடித்தன.
பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த நகரம், Mulhouse...
Mulhouse நகரம், சுவிஸ் மற்றும் ஜேர்மன் எல்லைகளுக்கருகில் அமைந்துள்ளது. அதுதான் பிரான்சில் வாவதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம்!
வேலை செய்யும் வயதிலிருப்போரின் சதவிகிதம் மற்றும் ஒருவருக்கு நீண்ட காலம் தடையின்றி பணி ஒப்பந்தங்கள் கிடைக்குமா என்னும் விடயங்களின் அடிப்படையில் வேலையில் ஸ்திரத்தன்மையும் ( job stability), சராசரி சம்பளம் வாங்கும் ஒருவர் ஒரு இடத்தில் எத்தனை சதுர மீற்றர் அளவுள்ள வீடு வாங்க முடியும் என்பதன் அடிப்படையில் வீடு வாங்கும் திறனும் (affordability of housing) கணக்கிடப்பட்டன.
அவ்வகையில், பாரீஸ், Marseille மற்றும் Lyon போன்ற பெரிய நகரங்கள் பட்டியலில் சிறந்த இடத்தைப் பெற முடியவில்லை.
சிறிய மற்றும் நடுத்தர நகரங்களோ, நிரந்தர வேலைக்கான அதிக வாய்ப்பையும், வீடு வாங்கும் திறனையும் அளிக்கக்கூடியவையாக உள்ளன.
பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகரங்கள்...
முதலிடத்தில் Mulhouse, இரண்டாவது இடத்தில் Orléans மற்றும் மூன்றாவது இடத்தில் Dijon ஆகிய நகரங்கள் உள்ளன.
பிரான்சின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் Mulhouse, அதிக வேலை ஸ்திரத்தன்மை உடைய Orléans, அதைப்போலவே பாரீஸிலிருந்து 2 மணி நேரத்துக்கும் குறைவனா பயணத் தூரத்திலிருக்கும் Dijon ஆகியவை நிரந்தர வேலைக்கான அதிக வாய்ப்பையும், வீடு வாங்கும் திறனையும் அளிக்கக்கூடியவையாக உள்ளதால் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
பாரீஸ் எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?
அதிகம் வெளிநாட்டவர்களால் அறியப்படாத சிறு நகரங்கள், பட்டியலில் முன்னணியில் நிற்க, பிரபலமான பாரீஸ் நகரமோ, பட்டியலில் அடிமட்டத்தில், 31ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம், அதன் அதிக வீட்டு விலை.
வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் அல்லாதவை எவை என்ற வகையில் பாரீஸுடன் கைகோர்த்துள்ள நகரங்கள் Nice மற்றும் Montpellier...