இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையம்: எது தெரியுமா?
பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் பொதுவாக பலரும் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
அந்தவகையில், இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையம் எது என்பது குறித்து பார்த்தோம்.
அதில், இந்தியாவின் அசுத்தமான முதல் 10 ரயில் நிலையங்களில் 6 ரயில் நிலையங்கள் சென்னையில் இருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்திய ரயில்வே தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாட்டிலுள்ள 760 ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டன.
அதில் இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்கள் மற்றும் அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பதிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான மற்றும் நவீனமான ரயில் நிலையம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
தூய்மையான முதல் 10 ரயில் நிலையங்கள்
1. ஜெய்ப்பூர் ( ராஜஸ்தான்)
2. ஜோத்பூர் ( ராஜஸ்தான்)
3. துர்காபுரா (ராஜஸ்தான்)
4. தவாய் (ஜம்மு)
5. காந்திநகர் - ஜேபி (ராஜஸ்தான்)
6. சூரத்கர் (ராஜஸ்தான்)
7. விஜயவாடா ( ஆந்திரா)
8. உதய்பூர் சிட்டி ( ராஜஸ்தான்)
9. அஜ்மீர் (ராஜஸ்தான்)
10. ஹரித்வார் (உத்தர்காண்ட்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |