உலகிலேயே ரூ. 3 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த ருத்ராட்சம்: எது தெரியுமா?
இந்து மதத்தில் ருத்ராட்சம் சிவனின் அம்சமாகவும், சிவபெருமானின் கண்ணீரில் இருந்து பிறந்தது ருத்ரன் என்று சொல்லப்படுகிறது.
இந்த ருத்ராட்சம் நமக்கு ருத்ராக்ஷ் என்னும் மரத்தில் இருந்து தான் கிடைக்கிறது. இந்த மரத்தை அனைத்து இடங்களிலும் பார்த்து விட முடியாது.
ஒரு முகம் முதல் 21 முகம் வரை ருத்ராட்சம் உள்ளது. இந்த மரம் நேபாளம், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியாவில் ஏராளமாக காணப்படுகிறது.
இருப்பினும், இந்தியாவிலும், இந்த மரம் பல மலைப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காணப்படுகிறது.
ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை அணிவதன் மூலம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் என்றும், மன அமைதி கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளவர்கள் இந்த ஒரு முக ருத்ராட்சத்தை அணிய அறிவுறுத்தப்படுகிறது.
பெரும்பாலும் பலரும் உபயோகப்படுத்தும் ருத்ராட்சம் 3 முகம், 5 முகம், 6 முகம், 7 முகம் கொண்டதாக தான் இருக்கும்.
அரிய வகையாக பார்க்கப்படும் ஒரு முக ருத்ராட்சம் பெரிதாக யாருக்கும் கிடைத்து விடாது.
உலகில் விலையுயர்ந்தாக கருதப்படும் இந்த ஒரு முக ருத்ராட்சத்தின் மதிப்பு 2 முதல் 3 கோடி ரூபாய் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |