இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான நகரம் தமிழகத்தில் தான் உள்ளது: எது தெரியுமா?
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள ஒரு வித்தியாசமான நாடாகும்.
இந்தியாவில் உள்ள சில நகரங்கள் வளர்ச்சியடைந்தவையாக இருக்கும், அதேபோல சில நகரங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்.
அதேபோல், சில நகரங்கள் மிகவும் சுத்தமானதாக இருக்கும், சில நகரங்கள் சுகாதாரத்தில் பின்தங்கியிருக்கும்.
அந்தவகையில், இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான நகரம் எது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்வச் சர்வேக்ஷன் 2025 அறிக்கையின்படி இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் தமிழகத்தின் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை இருப்பது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
மதுரை, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
கடுமையான சுகாதாரப் பிரச்சனைகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பிரச்சனைகள் இங்கு தொடர்ந்து உள்ளது.
இதனால், 4,823 புள்ளிகளுடன் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முன்னணியில் உள்ளது.
இதைதொடர்ந்து இரண்டாவது இடத்தில் பஞ்சாபின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றான லூதியானா, 5,272 மதிப்பெண்களுடன் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்கார சென்னை 6,822 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |