இந்தியாவில் முட்டையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா?
இந்தியாவின் முட்டைத் தலைநகரம் என்று அழைக்கப்படுவது தமிழ்நாட்டின் நாமக்கல்.
கோழிப் பண்ணைகள் மற்றும் முட்டை உற்பத்தி நாமக்கல்லின் முக்கிய பொருளாதாரமாக உள்ளது.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் முதல் வளைகுடா நாடுகளின் ஹோட்டல்கள் வரை நாமக்கல்லில் இருந்து முட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.
முட்டையில் தலைநகரம் என்று அழைக்கப்படும் நாமக்கல்லில் 1100க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
நாமக்கலில் இருந்து தினமும் 6 முதல் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை வர்த்தகத்தின் மூலம் தினசரி ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை வருமானம் ஈட்டப்படுகிறது.
முட்டை உற்பத்தி, பேக்கேஜிங், தீவன உற்பத்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.10000 கோடிக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.
நாமக்கலில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினமும் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்களுடன் இணைந்துள்ள போக்குவரத்து வசதி காரணமாக, நாமக்கல் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தினமும் சுமார் 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும், சமீபத்தில் அமெரிக்க சந்தையிலும் நாமக்கல் முட்டைகள் அறிமுகமாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |