தமிழ் சினிமாவில் முதன்முதலில் 100 கோடி வசூலித்த ரஜினியின் படம்.., எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது 100 கோடி வசூல் என்பது சாதாரணமான ஒரு விடயமாக உள்ளது.
ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் படங்கள் கொடுப்பது என்பது பெரிய விடயமாக இருந்தது.
அந்தவகையில், தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூலித்த ரஜினியின் படம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் தான் தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாகும்.

இதன்பிறகு, 2008ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தசவதாரம் திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது.
இதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது.
பின்னர் நடிகர் விஜய் நடித்து 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி படம் 100 கோடி வசூல் செய்தது.
இதற்கு அடுத்த ஆண்டு நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படம் 100 கோடி வசூல் செய்தது.
இதற்கடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படம் 100 கோடி வசூல் செய்தது.
இதனைதொடர்ந்து, தமிழ் சினிமாவில் பல படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |