இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம்.., எது தெரியுமா?
இந்தியாவில் விமானப் போக்குவரத்து நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது நாட்டில் நூற்றுக்கணக்கான விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, இந்தியாவின் முதல் விமான நிலையமாக மும்பையில் உள்ள ஜுஹு விமான நிலையம் கருதப்படுகிறது.
இந்த விமான நிலையான 1928ஆம் ஆண்டு தனியார் விமான இறங்குதளமாக தொடங்கப்பட்டது.
ஜுஹு விமான நிலையம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், அரபிக்கடல் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜூஹு விமான நிலையமே இந்தியாவின் முதன்மை விமான நிலையமாகச் செயல்பட்டது.
இந்தியாவின் முதல் வணிக விமானம் 1932ஆம் ஆண்டு இங்கு தரையிறங்கியது. அந்த விமானத்தை இயக்கியவர் ஜே.ஆர்.டி. டாட்டா ஆவார்.
பின்னர், இந்த சேவை டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அந்த நிறுவனம் பின்னர் ஏர் இந்தியா ஆக உருவெடுத்தது.
மும்பையில் உள்ள ஜூஹு விமான நிலையம், தற்போதைய பெரிய சர்வதேச விமான நிலையங்கள் உருவாகும் முன்பு நாட்டின் முக்கிய விமான நிலையமாக செயல்பட்டது.
தற்போதும் மும்பையில் உள்ள இந்த ஜுஹு விமான நிலையம் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் ஹெலிகாப்டர் சேவைகள், சிறிய விமானங்கள் மற்றும் விமானி பயிற்சி நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வணிக விமான சேவைகள் பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |