இந்தியாவில் இயற்கை வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் எது தெரியுமா?
வைரம் என்பது பூமியின் அடியில் அதிக அழுத்தத்தில் உருவாகும் தூய கார்பன் பொருள் ஆகும்.
அழகிய ஒளியைச் சிதறடிக்கும் தன்மை கொண்டதால், இது நவரத்தினங்களில் மிகவும் விலை உயர்ந்த ஆபரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் மிகவும் விலையுயர்ந்த ரத்தினங்களில் வைரம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் வைரம் வாங்குபவர்கள் குறைவாக இருந்தாலும், வைர பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் நாடு உலகளவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் இயற்கை வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் இயற்கை வைரம் வணிகரீதியாக உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள மஜ்கவான் வைரச் சுரங்கம் இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே வைரச் சுரங்கமாகும்.

இந்தச் சுரங்கத்தை தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் இயக்கி வருகிறது. ஒரு காலத்தில் கோல்கொண்டா உள்ளிட்ட பகுதிகளில் வைரச் சுரங்கங்கள் செயல்பட்டன.
உலகப் புகழ்பெற்ற கோஹினூர், ஹோப் டைமண்ட், ரீஜென்ட் டைமண்ட் போன்ற வைரங்கள் இந்தியாவில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டவை.
தற்போது இந்தியாவில் வைரங்களை வெட்டி மெருகூட்டும் தொழில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பதப்படுத்தப்படும் பெரும்பாலான இயற்கை வைரங்கள் ரஷ்யா, போட்ஸ்வானா, கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |