தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?
பல முக்கிய கோவில்கள் அமைந்துள்ள தமிழகம் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது.
தமிழகத்தின் மொத்த பரப்பளவு 130,058 சதுர கிலோமீட்டர். மேலும் 72,147,030 மக்கள்தொகையுடன் தமிழகம் 1956ல் உருவானது.
தமிழகத்தின் தற்போதைய எல்லைகளுடன் கூடிய மதராஸ் மாநிலம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி உருவானது.

பின்னர், 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இருப்பினும், தமிழ்நாடு என்ற பெயர் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் வெறும் 13 மாவட்டம் மட்டுமே உள்ள தமிழகம் தற்போது 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

அந்தவகையில், 6266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய வருமான ஆதாரங்களாக விவசாயம், ஜவுளித் தொழில்கள் மற்றும் வர்த்தகம் உள்ளது.
மேலும், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பொருட்களுக்கான மையமாகவும் உள்ளது.
திண்டுக்கல் நகரம் முன்பு, மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டத்தில் திருநெல்வேலி உள்ளது.
மேலும், திருவண்ணாமலை தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாவட்டம் ஆகும். இது 6,191 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |