50 நாட்கள் பயணம்.., உலகின் மிக நீண்ட பேருந்து வழித்தடம் எது தெரியுமா?
இந்தியாவிலிருந்து லண்டன் வரை பேருந்தில் செல்லும் வசதி 1950களில் இருந்தது என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
1957 ஏப்ரல் 15ஆம் திகதி லண்டனில் உள்ள விக்டோரியா கோச் நிலையத்தில் இருந்து London-Calcutta-London என்ற பெயரில் இந்த பேருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.
இது உலகின் மிக நீண்ட பேருந்து வழித்தடங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.
ஆல்பர்ட் என்ற பெயருடைய இந்த பேருந்து சுமார் 21 ஆண்டுகள் சேவையில் இருந்தது.

லண்டன்- கல்கத்தா வரை செல்ல இந்த பேருந்தில் சுமார் 50 நாட்கள் ஆகும். முழு சுற்றுப்பயணம் சுமார் 110 நாட்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
ஒரு வழிப் பயணச்சீட்டு 85 பவுண்டுகளாகவும், இருவழிப் பயணச்சீட்டு 145 பவுண்டுகளாகவும் இருந்தது.
அதவாது, ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் சுமார் 7,963 ரூபாயாகவும், திரும்பும் பயணத்திற்கான கட்டணம் சுமார் 6,089 ரூபாயாகவும் இருந்தது.
இந்த கட்டணத்தில் பயணம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை அடங்கியிருந்தன.
இந்த பேருந்து லண்டனிலிருந்து தொடங்கி பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனாரஸ் உள்ளிட்ட நகரங்கள் வழியாக கல்கத்தா சென்றது.
இந்த பேருந்தின் கீழ்தளத்தில் ஓய்வறை மற்றும் உணவறை, மேல்தளத்தில் பார்வை அறை, சமையலறை, இசை வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.
பயணத்தின் போது தாஜ்மஹால், ராஜ்பாத், கைபர் கணவாய் போன்ற முக்கிய சுற்றுலா இடங்களும் பார்க்கப்பட்டன.
இறுதியாக, பல ஆண்டுகள் சேவையில் இருந்த இந்த பேருந்து 1976ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |