நீச்சல் குளம், ஹெலிபேட் அனைத்தும் உள்ள உலகின் மிக நீளமான கார்: எது தெரியுமா?
உலகிலேயே இந்த தி அமெரிக்கன் டிரீம் கார்தான் மிகவும் ஆடம்பரமான காராகும். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்த லிமோசின் கார்தான் உலகின் மிகவும் நீளமான காராகும், மேலும் இது மிகவும் நீளமான பிரமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 30.54 மீட்டர் அதாவது 100 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான இந்த கார் 26 சக்கரங்களைக் கொண்டுள்ளது.
இந்த சூப்பர் லிமோசின் முதன்முதலில் 1986ஆம் ஆண்டு ஜெய் ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது.
முதலில் காரை உருவாக்கிய போது, இந்த கார் 60 அடி நீளமாக இருந்தது, பின்னர் அது 100 அடியாக நீட்டிக்கப்பட்டது.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, தி அமெரிக்கன் டிரீம் கார் உலகின் மிக நீளமான கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த கார் இரட்டை V8 எஞ்சின்களால் இயக்கப்பட்டது, இதில் ஒன்று முன்பக்கத்திலும் மற்றொன்று பின்புறத்திலும் பொருத்தப்பட்டது.
இதில் ஒரு பெரிய வாட்டர் பெட், நீச்சல் குளம், டைவிங் போர்டு, ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் போன்ற ஆடம்பர வசதிகள் உள்ளது.
அனைத்திற்கும் மேலாக, இந்த காரில் ஒரே நேரத்தில் 75 க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |