உலகின் 18 மணிநேரம் பயணித்து மிக நீண்ட தூரம் செல்லும் விமானம்: எது தெரியுமா?
உலகில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர் வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்துகள் உள்ளன.
அதில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, சில மணி நேரங்களில் கடக்கும் திறன் விமானங்களுக்கு மட்டுமே இருக்கிறது.
அந்தவகையில், உலகின் மிக நீண்ட தூரம் பயணம் செல்லும் 3 விமான பாதை குறித்து பார்க்கலாம்.
முதல் விமான பாதை
நியூயார்க்கில் இருந்து சிங்கப்பூர் வரையிலான தூரம் 9,537 மைல்கள். அதாவது 15,348 கிலோ மீட்டர் தூரம். அ
தாவது நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் 18 மணி நேரம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைகின்றது.
இதுவே உலகின் மிக நீண்ட தூர விமானப் பாதையாகும்.
இரண்டாவது விமான பாதை
நியூயார்க்கின் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு புறப்படுகிறது.
9,523 மைல்களை 18 மணி நேரம் 45 நிமிடங்களில் வந்தடைந்தது. இது உலகின் இரண்டாவது மிக நீளமான விமானப் பாதையாகும்.
மூன்றாவது விமான பாதை
உலகின் மூன்றாவது பெரிய விமானப் பாதை தோஹா முதல் ஆக்லாந்து வரை ஆகும்.
கத்தார் ஏர்பஸ் தோஹாவிலிருந்து 17 மணி நேரம் 35 நிமிட பயணத்திற்குப் பிறகு ஆக்லாந்தை அடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |