விலை ரூ.4 லட்சம்... உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோழி எது தெரியுமா?

Chicken
By Yashini Sep 30, 2026 11:39 AM GMT
Report

Which is the most expensive chicken in the world- பொதுவாக சந்தையில் ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், உலகில் ஒரு கோழி மட்டும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, இந்தோனேசியாவைச் சேர்ந்த அயாம் செமானி என்ற கருப்பு கோழிதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோழி.

விலை ரூ.4 லட்சம்... உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோழி எது தெரியுமா? | Which Is The Most Expensive Chicken In The World  

இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த அயாம் செமானி கோழியின் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

இதன் இறகுகள், அலகு, நாக்கு, தோல், இறைச்சி, எலும்புகள் மற்றும் உள் உறுப்புகள் என அனைத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும்.

இதற்கு ஃபைப்ரோமெலனோசிஸ் என்ற மரபணு மாற்றமே காரணமாகும். இதனால் உடலில் அதிக அளவு மெலனின் உற்பத்தியாகி, கோழியின் உடல் முழுவதும் கருப்பு நிறமாக காணப்படுகிறது.

விலை ரூ.4 லட்சம்... உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோழி எது தெரியுமா? | Which Is The Most Expensive Chicken In The World  

சர்வதேச சந்தையில் தூய்மையான அயாம் செமானி கோழி 2,500 முதல் 5,000 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய மதிப்பில் இது ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாகும். ஒரு அயாம் செமானி கோழி ஆண்டுக்கு சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும்.

இந்த கோழியின் விலை அதிகமாக இருப்பதற்கு அதன் அரிதான தன்மையும் முக்கிய காரணமாகும். மேலும், இதனை இனப்பெருக்கம் செய்வதும் சிரமமானதாக கூறப்படுகிறது.

விலை ரூ.4 லட்சம்... உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கோழி எது தெரியுமா? | Which Is The Most Expensive Chicken In The World

குஞ்சுகள் இளம் வயதிலேயே இறக்கும் வாய்ப்பும் அதிகம் என்பதால் இந்த கோழிக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது.

கருப்பு கோழி இறைச்சியில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சாதாரண கோழி இறைச்சியுடன் ஒப்பிடும்போது இதில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அயாம் செமானி கோழி அதன் அரிய தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        




மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US