இந்தியாவின் மிக விலையுயர்ந்த நகரம் எது தெரியுமா?
இந்தியாவின் நிதித் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை, நாட்டிலேயே வெளிநாட்டினருக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக கொண்டுள்ளது.
அடுத்தபடியாக, தலைநகர் டெல்லி பல படிகள் முன்னேறி மும்பைக்கு அடுத்த நிலையில் உள்ளது.
மெர்சரின் சமீபத்திய "2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பில்", ஆசியாவிலேயே வெளிநாட்டினருக்கு 21வது மிக விலையுயர்ந்த நகரமாக மும்பை மாறியுள்ளது.
அதேநேரத்தில், டெல்லி பிராந்தியத்தில் கணக்கெடுக்கப்பட்ட இடங்களில் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்தவகையில், உலகளவில், ஹாங்காங் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக அதன் அந்தஸ்தைக் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மும்பை குறிப்பிடத்தக்க வகையில், 11 இடங்கள் ஏறி, இப்போது உலகளவில் 136வது இடத்தில் உள்ளது.
கணக்கெடுப்பில் உள்ள மற்ற இந்திய நகரங்களான புது டெல்லி நான்கு இடங்கள் முன்னேறி 164வது இடத்தில் உள்ளது.
சென்னை 5 இடங்கள் சரிந்து 189வது இடத்திற்கும், பெங்களூரு 6 இடங்கள் சரிந்து 195வது இடத்திற்கும், ஐதராபாத் நிலையானது 202வது இடத்திலும் உள்ளது.
மேலும், புனே 8 இடங்கள் முன்னேறி 205வது இடத்திற்கும், கொல்கத்தா 4 இடங்கள் முன்னேறி 207வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |