ஒரு கிலோ ரூ. 35,000.., உலகின் மிக விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா?
சமையலில் மிகவும் அவசியமான உப்பு உணவின் சுவையை உயர்த்துவதில் உப்பின் பங்கு முக்கியமானது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது குறைந்த விலையில் எளிதாக கிடைக்கிறது.
ஆனால், உலகில் தங்கத்திற்குச் சமமான விலையில் விற்கப்படும் ஒரு உப்பு உள்ளது. அந்த உப்பு தான் கொரியா மூங்கில் உப்பு (Korean Bamboo Salt).
உலகின் மிகவும் விலையுயர்ந்த உப்பாகக் கருதப்படும் கொரியா மூங்கில் உப்பின் ஒரு கிலோ விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.35,000 ஆகும்.

இந்த உப்பு கடல் நீரில் இருந்து பெறப்பட்டாலும், அதை தயாரிக்கும் முறை மிகவும் சிக்கலானது.
கடல் உப்பை தடிமனான மூங்கில் தண்டுக்குள் நிரப்பி, அதை களிமண்ணால் மூடி, பைன் விறகுகளைப் பயன்படுத்தி அதிக வெப்பத்தில் சுடுவார்கள்.
இந்த செயலை மொத்தம் 9 முறை மீண்டும் செய்ய வேண்டும். இறுதியாக 9வது முறையில், 1000° செல்சியஸ் வெப்பநிலையில் உப்பு சுடப்படுகிறது.
இந்த நீண்ட செயல்முறையால், உப்பு மூங்கிலின் தன்மையை உறிஞ்சி, பல நிறப் படிகங்களுடன் (நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை) உருவாகிறது.

லேசான இனிப்பு சுவையுடன் ஊதா நிறத்தில் தோன்றும் இந்த உப்பை ஜூகியோம் (Jugyeom) என்றும் அழைக்கின்றனர்.
ஒரு தொகுதி கொரியா மூங்கில் உப்பை தயாரிக்க சுமார் 50 நாட்கள் ஆகும்.
அதிக உழைப்பும் நேரமும் தேவைப்படுவதால் தான் இந்த உப்பின் விலை மிக உயரமாக உள்ளது.
இந்த உப்பு கொரியாவின் பாரம்பரிய மருத்துவத்திலும், சிறப்பு உணவுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |