உலகிலேயே வைரத்தைவிட மிகவும் விலையுயர்ந்த மரம்.., எது தெரியுமா?
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
அதேபோல், வைரங்களின் விலையும் சில நேரங்களில் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ரூபாய்களை கூட தொடும்.
ஆனால், தங்கம் மற்றும் வெள்ளியைவிட விலை உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் அகர்வுட் மரம்.
உலகின் மிகவும் விலையுயர்ந்த மரங்களில் ஒன்றான அகர்வுட் மிகவும் வேகமாக வளரும் மரமாகும்.
இந்தியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் அகர்வுட் காணப்படுகிறது.
மேலும், இது தெற்காசியாவின் இமயமலை அடிவாரத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவின் மழைக்காடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி வரை பரந்த புவியியல் பகுதியில் காணப்படுகிறது.
இந்த மரத்தின் தனித்துவமான நறுமணம் வாசனை திரவியங்கள், தூபங்கள் மற்றும் மருந்துகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
அகர்வுட்டின் விலை தங்கம், வெள்ளி அல்லது வேறு விலைமதிப்பற்ற உலோகத்தையும்விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த மரத்தில் உள்ள பிசின் உருவாக பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதால் அதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அகர்வுட்டிலிருந்து தயாரிக்கப்படும் அவுத் என்ற வாசனை திரவியம் உலகின் மிகவும் விலையுயர்ந்த வாசனை திரவியங்களில் ஒன்றாகும்.
அகர்வுட் மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுவதால் இதன் மதிப்பை இன்னும் அதிகமாகிறது.
மேலும், இந்த மரம் சட்டவிரோதமாக அதிக அளவில் வெட்டப்படும் காரணமாக விலை இன்னும் அதிகமாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |