பல ஆயிரம் கோடி.., இந்தியாவிலேயே அதிக செலவில் நடந்த திருமணம் எது?
இந்தியாவில் திருமண உறவு என்பது வெறும் நிகழ்வு என்பதையும் விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய பெற்றோர்களின் மிகப்பெரிய கனவே குழந்தைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதுதான்.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக செலவில் நடத்தப்பட்ட திருமணம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அந்தவகையில், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இல்லத்தில் கடந்த வருடம் நடந்த திருமணம்தான் மிகவும் ஆடம்பரமான திருமணமாகும்.

முகேஷ் அம்பானியின் பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர்.
அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் தங்கியிருக்கும் ஆண்டிலியா வீடு ரூ.15000 கோடி மதிப்புடையது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, ஜூலை 2024ல் மும்பையில் ராதிகா மெர்ச்சண்டை மணந்தார்.

இந்த திருமணத்தின் கொண்டாட்டங்கள் பல மாதங்களுக்கு முன்பே குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
உலகளாவிய பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், பாலிவுட் நடிகர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் என இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முகேஷ் அம்பானி இந்த திருமணத்திற்காக கிட்டதட்ட 5000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |