உலகில் அதிகம் விஷம் உள்ள பாம்பு எது?
உலகில் அதிகம் விஷம் உள்ள பாம்பு என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
Philippine Cobra
பயங்கரமான பாம்பு என்று நம்மை அச்சமடைய வைப்பதில் , உலகில் மூன்றாவது இடத்தில் நிற்கும் பாம்பு இது. சுமாராக 3 மீ்றறர் துாரம் வரை(10அடி) தன் விடத்தைத் துப்ப , வல்லமை கொண்டதால், இது பிறரைப் பெரிதும் அஞ்ச வைக்கின்றது. கடித்து 30 நிமிடங்களுக்குள் மரணம் நேர்ந்து விடும்.
Black mamba
விடமுள்ள மிக நீண்ட பாம்பு இதுதான். ஒரு யானையை தன் விடத்தால் சில மணி நேரங்களில் கொல்ல இந்தப் பாம்பினால் முடியும்.
அதிக பட்சம்4.3 மீ. நீளம் வரை காணப்படும் Black mamba ஆபிரிக்ககாவின் மிக ஆபத்தான பாம்பாகும். மிக வேகமாக ஓடக்கூடியதும், அதிக விஷம் கொண்டிருப்பதும் இதன் தனித்தன்மையாகும்.
Blue Krait
இது இன்னொரு ஆபத்தான பாம்பு.. இதற்கு Malayan Krait என்றொரு பெயரும் உண்டு. இது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குரிய ஒரு விஷப் பாம்பினமாகும். அதிக விஷம் கொண்ட இந்த இனப் பாம்புகள் மலேசியாவிலும், வியட்னாமிலும், தாய்லாந்து, சுமத்திரா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.
மூர்க்கத்தனம் கொண்ட இந்தப் பாம்புகள் இரவு வேட்டைக்காரர்கள். இது ஒரு தடவை எவரையாவது தீண்டி வெளிவரும் விடம், பத்து வளர்ந்த மனிதரைக் கொல்லப் போதுமானது.