ஒன்பது மூளைகளை கொண்ட ஒரே உயிரினம்.., எது தெரியுமா?
உயிரினங்கள் என்பவை நிலம், நீர், காற்றில் வாழும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களைக் குறிக்கும்.
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான பண்புகளையும், ஆச்சரியமான திறன்களையும் கொண்டுள்ளன.
அந்தவகையில், ஒன்பது மூளைகளை கொண்ட உயிரினம் கடல்களில் வாழும் ஆக்டோபஸ் தான்.
இவை மென்மையான உடல், எட்டு கைகள் மற்றும் அசாதாரணமான நுண்ணறிவு கொண்டுள்ளன.

மொத்தம் 300 வகை இனங்களை கொண்ட ஆக்டோபஸ் அனைத்திற்குமே மூன்று இதயங்கள் உள்ளன.
இந்த மூன்று இதயங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு மிகவும் சிக்கலான முறையில் செயல்படுகின்றன.
ஒரு இதயம் அவற்றின் செவுள்களிலிருந்து உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கலந்த இரத்தத்தை வழங்குகிறது.
மேலும், மற்ற இரண்டு இதயங்களும் அதனின் செவுள்கள் வழியாக இரத்தத்தை உந்தித் தள்ளி, நீரில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தத்துடன் கலக்க உதவுகின்றன.

இவற்றின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.
ஒன்பது மூளைகளில் ஒரு மைய மூளை நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. மற்ற எட்டு மூளைகளும் அவற்றின் எட்டு கைகளிலும் உள்ளது.
இதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது. இதற்கு காரணம் இதன் இரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் என்ற செப்பு நிறைந்த புரதம் தான்.
மேலும், எதிரிகளின் பார்வையில் படாமல் இருக்க, இவை சுற்றுப்புறத்திற்கு ஏற்ப தோலின் நிறத்தையும் தோற்றத்தையும் மாற்றிக் கொள்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |