இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் எது தெரியுமா? சொத்துக்கள் மட்டும் இத்தனை கோடியா!
இந்தியாவில் அரசியல் முதல் அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.
சினிமாவிலும் நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர்.
அந்தவகையில் இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது. அவர்களது மொத்த சொத்து மதிப்பு, கபூர்கள் மற்றும் அக்கினேனிகளை காட்டிலும் அதிகமாகும்.
இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம்
அது வேறு யாருமில்லை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள்தான். அல்லு-கொனிடேலா குடும்பம் தான் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால் 1950ல் மெகா குடும்பம் உருவானது.
அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம்பதித்தது. இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.
அல்லு ராமலிங்கய்யாவின 4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார்.
அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் அவர்களது வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல நட்சத்திரங்கள் கிடைத்தனர்.
உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தனர்.
இந்த மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளது.
இதில், Geetha Arts, Anjana Productions, Pawan Kalyan Creative Works, Konidela Productions Company உள்பட 5 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் Allu Studio ஆகியவை உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |