கோடீஸ்வரர்கள் மட்டும் வாழும் இந்தியாவின் பணக்கார கிராமம்: எது தெரியுமா?
கோடீஸ்வரர்கள் மட்டும் வாழும் இந்தியாவின் பணக்கார கிராமத்தின் பெயர் மாதபர். இந்த கிராமம் குஜராத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் 7,600 வீடுகள் மற்றும் சுமார் 92,000 மக்கள் இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்.
இந்தியாவை விட மிகவும் வலுவான பொருளாதாரம் கொண்ட இந்த கிராமத்தில் மொத்தம் 17 வங்கிக் கிளைகள் உள்ளன.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள தொகை மட்டுமே ரூ. 5,000 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்த கிராமத்தை சேர்ந்த சில நபர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கின்றன.
அவர்கள் வெளிநாடுகளில் கடினமாக உழைத்து, நிறைய பணம் சம்பாதித்து சொந்த ஊரில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கின்றன.
மேலும் அவர்கள் கிராமத்தின் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.
மாதபர் கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், உயர்தர சாலைகள் என அனைத்து வசதிகளும் உள்ளது.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் இந்தியாவின் பல வளர்ந்த நகரங்களை விட சிறப்பாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |