உலகின் மிக சிறிய நாடு எது? அதன் சிறப்புக்கள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்
Vatican City இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும்.
இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வாடிகான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்துவின் தலைமை மையமாக வாடிகான் நகரம் திகழ்கிறது.
இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், மொத்த மக்கள் தொகை 825 ஆகவும் இருக்கிறது. ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
வத்திக்கான் நகரத்தின் பெயர் முதலில் லடான் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது, இது 11 பெப்ரவரி 1929 இல் கையெழுத்திடப்பட்டது, இது நவீன நகர-நாட்டை நிறுவியது.
இப்பெயரானது வத்திக்கான் மலையில் இருந்து எடுக்கப்பட்டது, நாட்டின் புவியியல் அமைந்த இடம் இதுவாகும். "வத்திக்கான்" என்பது எட்ருஸ்கன் குடியேற்றத்தின் பெயரிலிருந்து தோன்றியது, வத்திக்கான் அல்லது வத்திகம் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும்.
வத்திக்கான் நகரம் அதிகாரப்பூர்வமாக இத்தாலிய மொழியைப் பயன்படுத்துகிறது.
சிறப்பு
வத்திக்கான் நாட்டின் தேசிய விளையாட்டு உதைபந்தாட்டம் ஆகும். இதன் தேசிய மிருகம் Cardinal ஆகும். இது சிறிய நகரமாக இருப்பதனால் இங்கு விமான போக்குவரத்து இல்லை. அத்துடன் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறிய அளவிலான போக்குவரத்து முறைமை மாத்திரமே உள்ளது.
இங்குள்ள மக்களின் பிரதான கைத்தொழில்களாக நாணய உற்பத்தி, முத்திரை உற்பத்தி, ஆடைகள், சுற்றுலா போன்றன காணப்படுகின்றன.
வத்திக்கான் நாட்டில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வாடிகன் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன.
இந்த நகரத்தில் Vatican Apostolic Library முக்கிய புள்ளியாக காணப்படுகின்றது. இங்கு 75000 நூல் வகைகளும் 1.6 மில்லியன் நூல்களும் காணப்படுகின்றன. அத்துடன் 40 மொழிகளினை கொண்ட நூல்கள் இங்கு காணப்படுகின்றன.
இதுதவிர இங்குள்ள அருங்காட்சியகம் சிறப்பு பெற்ற ஒரு இடமாக காணப்படுகின்றது. அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இதனை கண்டு இரசிப்பது வழக்கம். இங்கு வரலாற்று பதிவுகள்,பழைய பொருட்கள், காலனித்துவ தடயங்கள், அகழ்வு பொருட்கள், அறிய வகையான சொத்துக்கள் ஆகியன காணப்படுகின்றன.