இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் எது தெரியுமா? வெறும் 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளது
இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் எது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
மேலும், அங்கு வெறும் 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளது.
அந்தவகையில், இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றது கோவா.
இங்கு உள்ள இரண்டு மாவட்டங்கள் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா அவ்வளவுதான்.
நாட்டின் சுற்றுலாத் தலங்களில் கோவாவும் முக்கியமான ஒன்று.
கோவா நீண்ட காலமாக போர்த்துகீசியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த மாநிலம் 1961-ல் சுதந்திரம் பெற்றது.
இந்த மாநிலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல வெறும் 2.30 மணி நேரம் தான் ஆகும்.
இது பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாக உள்ளது.
இந்த மாநிலத்தின் மொத்த பரப்பளவு 3702 சதுர கிலோமீட்டர்.
இருப்பினும், அழகிய கடற்கரையின் காரணமாக, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |