உலகில் மிக உயரமாக பறக்கும் பறவை எது தெரியுமா?
உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை பார் ஹீதேத் கூசே (Bar Headed Goose) ஆகும் . இது ஆசிய பட்டை தலை வாத்து என்று அழைகப்படுகின்றது.
இது ஆச்சரியப்படதக்க உயரமான 10,175 m (33,382 feet) பறக்க வல்லது. வடமொழியில் இதை ராஜ்ஹன்ஸ் என்று அழைப்பர்.
இந்த பறவை வருடா வருடம் வசந்த காலத்தில் மங்கோலியா வரை இனப் பெருக்கத்துக்காக பறந்து செல்லும். அதன் வழியில் அவைகள் இமயமலைத் தொடரை தாண்டி பறக்கும்.
இந்தப் பயணத்தில் அவை 18000 அடி உயரத்தில் அல்லது அதற்கு மேலாகவும் பெரும்பாலான மலைகளை கடக்க நேரும்.
அதிக பட்சமாக இவை 21000 அடிகள் வரை கூட பறக்க முடியும். இவை இமயமலையை இடையில் ஓய்வு எடுக்காமல் எட்டு மணி நேரத்தில் உயரத்தில் பறந்து கடந்து விடும் ஆற்றல் உள்ளவை.
இதனால் வருடத்துக்கு 3-8 முட்டைகளை இடும். இதனால் ஒக்சிசன் மிக குறைந்த இடத்திலும் சுவாசிக்கவும் அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும்.
இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெற் வேகத்தில் பறக்க முடியும் இதனுடைய நீளம் 71–76 cm (28-30 in) உம் நிறை 1.87-3.2 kgஆகும்.