இந்தியாவின் மிகவும் பணக்கார கிராமம்: எது தெரியுமா?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபர் என்ற கிராமம்தான் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாகத் கருதப்படுகிறது.
இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள், சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தனிநபர் டெபாசிட் தொகை ரூ. 15 லட்சம்.
இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை மட்டும் ரூ.5,000 கோடி என கூறப்படுகிறது.
இக்கிராமத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள், கல்லூரிகள், அணைக்கட்டுகள், கோயில்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த கிராமத்தில் கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும்.
இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான்.
வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.
இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து இங்கு சேமித்து வைக்கிறாங்கள்.
அயல்நாட்டில் வசித்தாலும் தங்கள் பணத்தை இந்தியாவில் உள்ள இந்த கிராம வங்கிகளில்தான் சேமிக்கின்றனர்.
விவசாயம்தான் மாதாபரின் தொழில், இங்கிருந்து விளைபொருட்கள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |