39 மனைவிகள், 94 குழந்தைகள்.., உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் எது தெரியுமா?
39 மனைவிகள், 94 குழந்தைகள் என 200க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய இந்திய குடும்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெரிய குடும்பம்
உலகின் மிகப்பெரிய குடும்பமாக ஒரு இந்திய குடும்பம் உள்ளது.
இந்தக் குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா. அவர் 2021ஆம் ஆண்டு 76 வயதில் காலமானார்.

17 வயதில் முதல் திருமணம் செய்த ஜியோனா, பின்னர் மொத்தம் 39 திருமணங்கள் செய்தார்.
அவருக்கு 94 குழந்தைகளும், 33க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளும் இருந்தனர். மொத்தமாக 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

நான்கு மாடி வீடு
இந்தக் குடும்பம் லால்பா கோஹ்ரான் தார் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவைச் சேர்ந்தது.
இந்த பிரம்மாண்ட குடும்பம் மிசோரமின் பக்தாவ்ங் கிராமத்தில் வசிக்கிறது. அவர்கள் வசிக்கும் நான்கு மாடி வீடு சுவான் தார் ரன் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 100 அறைகள் கொண்ட இந்த வீடு, அந்தப் பகுதியில் மிகப்பெரிய இல்லமாகும்.

குறிப்பாக, இந்த அக்குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டின் நிர்வாகம்
வீட்டு நிர்வாகத்தை குடும்பத்தின் மூத்த பெண்மணி கவனிக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைகள் பிரித்து வழங்கப்படுகின்றன.
சிலர் சமையலும், மற்றவர்கள் விவசாயம், வீட்டு சுத்தம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்தக் குடும்பத்திற்காக தினமும் 90kg அரிசி, 40kg உருளைக்கிழங்கு, 25kg காய்கறிகள், 20kg பருப்பு, 40 கோழிகள் சமைக்கப்படுகிறது.
பெரிய விறகு அடுப்புகளில் பிரம்மாண்ட பாத்திரங்களில் மொத்த குடும்பத்தினருக்கும் உணவு சமைக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஜியோனா சானா உயிரிழந்தாலும், உலகின் மிகப்பெரிய குடும்பமாக அவரது குடும்பம் இன்றும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |