உலகிலேயே பாம்புகள் மட்டுமே வாழும் பயங்கர தீவு: எங்கு உள்ளது தெரியுமா?
உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் மர்மங்கள் நிறைந்த உயிரினங்களில் ஒன்று பாம்பு.
பாம்புகளை பார்த்தால் படையே நடுக்கும் என்பதுகேற்ப பாம்புகள் உலகின் பல புராணங்களிலும், மதக் கதைகளிலும் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.
அந்தவகையில், உலகிலேயே பாம்புகள் மட்டுமே வாழும் பயங்கர தீவு எங்கு உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, உலகின் மிகவும் ஆபத்தான இடம்தான் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, இது பாம்புத் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
பிரேசிலின் சாவோ பாலோவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளுக்குத் தாயகமாக இருக்கிறது.
எனவே பிரேசில் அரசாங்கம் இங்கு அனைத்து விதமான அணுகலையும் தடை செய்துள்ளது.
கடற்படை கூட வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது, அதுவும் ஒரு மருத்துவர் மற்றும் விஷ எதிர்ப்பு மருந்தோடு செல்ல வேண்டும்.
11,000 ஆண்டுகளுக்கு முன்பு, பிரேசிலின் மலைப்பகுதி கடல் மட்டம் உயர்ந்ததால் துண்டிக்கப்பட்டது.
அதன்பின் பாம்புகள் இங்கு பரிணமித்து பறவைகள் மற்றும் புலம்பெயர்ந்த உயிரினங்களை வேட்டையாடி வாழ்கின்றன.
இங்கு உள்ள Golden Lancehead போன்ற பாம்புகள் பிரதான நிலப்பகுதியில் உள்ள அதே இன பாம்புகளை விட ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அதேபோல், இந்த தீவில் உள்ள Bothrops insularis என்ற பாம்பின் விஷம் Bothrops jararaca வை விட ஐந்து மடங்கு வலிமையானது.
மேலும் இந்த தீவின் பாம்பு விஷம் உயர் இரத்த அழுத்த சிகிச்சை மற்றும் சில முக்கியமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |