தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம்.., எது தெரியுமா?
Which metal is 2 lakh times costlier than gold- தங்கம் உலகின் விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் தங்கம் செல்வத்தின் அடையாளமாக மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மக்களுக்கு அதை வாங்குவது சவாலாகி வருகிறது.

இந்நிலையில், தங்கத்தை விட பல மடங்கு விலை உயர்ந்த ஒரு உலோகம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒன்று.
அந்த உலோகத்தின் ஒரு கிராமின் விலை, 200 கிலோ தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், தங்கத்தை விட பல மடங்கு விலை உயர்ந்த உலோகம் கலிஃபோர்னியம் ஆகும்.
கலிஃபோர்னியம் என்பது செயற்கையாக உருவாக்கப்படும் கதிரியக்கத் தனிமம். ஆய்வகங்களில் சிக்கலான முறையில் தயாரிக்கப்படுகிறது.
கலிஃபோர்னியம் 1950ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் பெயரே இந்த தனிமத்துக்கு சூட்டப்பட்டது. வேதியியல் அட்டவணையில் இது Cf என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது.
சில தரவுகளின்படி, ஒரு கிராம் கலிஃபோர்னியத்தின் விலை சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.240 கோடி என மதிப்பிடப்படுகிறது.
இதனால், ஒரு கிராம் கலிஃபோர்னியத்தின் மதிப்பு 200 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உலகில் குறிப்பிட்ட சில ஆய்வகங்களில் மட்டுமே இது தயாரிக்கப்படுகிறது. இதன் உற்பத்தி முறையும் மிகவும் சிக்கலானது.

கலிஃபோர்னியம் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக அணு உலைகள் மற்றும் அணுக்கரு ஆராய்ச்சிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
மேலும், மருத்துவம், தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் இதன் பயன்பாடுகள் உள்ளன.
கலிஃபோர்னியம்-252-ல் இருந்து வெளிப்படும் நியூட்ரான்கள் சில வகையான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கலிஃபோர்னியம் மிகவும் அரிதாகக் கிடைப்பதால், உலகின் அதிக விலை கொண்ட தனிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |