அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் எது?
அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த உலோகம்?
வெள்ளி போல காட்சியளிக்கும் உலோகமானது அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிகமான தேவையை கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதன் விலையானது தங்கத்தை விட பலமடங்கு குறைவாகும்.
பித்தளை, வெள்ளி, அலுமினியம் போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் (Zinc) தேவையானது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) தரப்பில் கூறுகையில், "அடுத்த 10 ஆண்டுகளில் துத்தநாகத்தின் நுகர்வு 11 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜிங்க் காலேஜ் 2024 (Zinc College) நிகழ்ச்சியில் IZA நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன் என்பவர் பேசுகையில், "இந்தியாவில் துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது அதன் உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது.
தற்போது, துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது 11 லட்சம் டன்கள் ஆகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தேவை 20 லட்சம் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் தங்கத்தை விட துத்தநாகத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் 700 டன்களுக்கும் அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |