சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க? இவ்வளவு தான் பயன்படுத்தனுமாம்
Best Cooking Oil For Health: நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் எவை சிறந்ததாக இருக்கின்றது? எந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சமையலுக்கு எண்ணெய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ள நிலையில், குழம்பு, பொரியல், காய்கறியை வதக்குவது, தோசை சுடுவது, பஜ்ஜி, வடை செய்வது என அனைத்திற்கும் சமையல் எண்ணெய் அவசியமாக இருக்கின்றது.
ஆனால் நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் நமக்கு ஆரோக்கியத்தினை அளிக்கின்றதா? என்பதை நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில் என்று பயன்படுத்துவது உண்டு.
இவற்றில் எந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம்? அதனை எவ்வளவு பயன்படுத்தலாம்? என்பதை தொடர்ந்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

எண்ணெய்யில் உள்ள கொழுப்புகள்
எண்ணெய்யில் மூன்று வகையான கொழுப்புகள் இருக்கின்றது. நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), ஒற்றை நிறைவுறா கொழுப்பு (MUFA), பல்நிறைவுறா கொழுப்பு (PUFA) என்பன ஆகும்.
தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு(LDL) அதிகமாகும். ஆகவே இதனை குறைவாக உணவில் சேர்ப்பது நல்லது.
தேங்காய் எண்ணெய்: நிறைவுற்ற கொழுப்புகள் தேங்காய் எண்ணெய்யில் அதிகமாக உள்ளதால் இதனை பயன்படுத்தும் போது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆதலால் சுவைக்காக அளவோடு பயன்படுத்தவும்.
பாமாயில்: இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கின்றது. அதிலும் கடைகளில் கிடைக்கும் பஜ்ஜி, போண்டா இவைகள் இந்த எண்ணெய்யில் தான் தயாரிக்கப்படுகின்றது. ஆதலால் வெளியே சாப்பிடும் போது கவனம் தேவை.

நல்லெண்ணெய்: நல்லெண்ணெய்யில் MUFA மற்றும் PUFA கொழுப்புகள் சமநிலையில் உள்ளதுடன், லிக்னன்ஸ் போன்ற தாவர சேர்மங்கள் காணப்படுகின்றது. ஆகவே இதனை குழம்பு, தாளிப்பு, இட்லி பொடிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடலெண்ணெய்: இதில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், பொரியல், தோசை இவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரைஸ் பிரான் ஆயில்: இந்த எண்ணெய்யில் மூன்று வகையான கொழுப்புகளும் சமநிலையில் உள்ளதுடன், இதில் ஒரிசனால் என்ற கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க உதவுமாம்.
சூரியகாந்தி எண்ணெய்: இதே போன்று சூரியகாந்தி எண்ணெய்யில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இதனை சமையலுக்கு சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

நெய் மற்றும் வெண்ணெய்: நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் அளவோடு பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
வனஸ்பதி: வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கக்கூடும் என்பதால், இவை இதய ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்து என்பதால் இதனை தவிர்த்துக் கொள்ளவது சிறந்தது.
எவ்வளவு எண்ணெய்யை பயன்படுத்தலாம்?
ஒருவரது உடைல் உழைப்பு மற்றும் கலோரி தேவைகளுக்கு ஏற்ப கொழுப்பின் அளவை தீர்மானிக்க வேண்டுமாம். அந்த வகையில் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு சுமார் 20 கிராம் எண்ணெய் போதுமானதாக இருக்கின்றது. ஆனால் ஆண்களுக்கு சுமார் 30 கிராம் வரை தேவைப்படலாம்.
ஒரு டீஸ்பூன் எண்ணெய் சுமார் 5 கிராமாக இருக்கும். சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்யின் அளவு மிகவு முக்கியம் ஆகும்.
ஒரே எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில் இவற்றினை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் இவற்றினை சுவைக்காக குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய்யை அதிகமாக சூடாக்க வேண்டாம், ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யில் மீண்டும் பயன்படுத்துவது கூடாது. எண்ணெய் கருப்பாக மாறினாலோ, கெட்டியான அல்லது நுரை வரும் விதத்தில் இருந்தால் பயன்படுத்துவது கூடாது. வடை, பஜ்ஜி இவற்றிற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
ஆனால் எண்ணெய்யில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களான A, D, E, K இவற்றினை உடல் பயன்படுத்துவதற்கு உணவில் கொழுப்பு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதயநோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை, சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் உணவில் சேர்க்கும் எண்ணெய்யின் வகை, அளவு இவற்றினை மருத்துவரிடம் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |