பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? உடனே இந்த செடியை வீட்டில் நட்டு வையுங்கள்
பழங்காலத்திலிருந்தே சில மரங்கள் மற்றும் தாவரங்கள் நமது கலாச்சாரத்தில் ஜோதிடத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. அவை பல வகையில் பல சூழ்நிலையில் ஒருவருடைய வாழ்வில் உதவுகிறது.
குறிப்பாக கூற வேண்டுமென்றால், வீட்டில் நிதிநிலைமையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் உடனே இந்த மரத்தை வீட்டில் நட்டு வைக்கலாம். அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
துளசி செடி
இந்து மதத்தை பொறுத்தளவில் துளசி செடியானது வாழ்க்கையில் பல வகையில் நன்மையை அள்ளித்தருகிறது.
வீட்டில் துளசி இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். பணப்பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகளும் குறையும்.
ஷமி மரம்
வீட்டின் தெற்கு திசையில் இந்த செடியை நட்டு வைப்பதன் மூலம் வீட்டில் நிதிநிலைமை நன்றாக இருக்கும்.
சிவபெருமானின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிலந்தி செடி
வீட்டில் சிலந்தி செடி வைத்திருப்பது வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வாழ்க்கை நல்ல திசையில் செல்லும் மற்றும் குடும்பத்தில் இருந்து வந்த பண பிரச்சினைகள் குறையும்.
ஜேட் செடி
வீட்டில் இருக்கும் வாஸ்து குறைப்பாட்டை ஜேட் செடி முற்றிலும் நீக்கிறது. இதை பிரதான வாசலில் வைக்க வேண்டும்.
இதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நிதி சிக்கல் குறையும் மற்றும் குடும்ப உறப்பினர்களிடையில் பாசம் அதிகரிக்கும்.
மணி பிளாண்ட்
மணி பிளாண்ட் என்பது பணம் பிரச்சினையை தடுக்கும். இந்த செடி வளர வளர வீட்டில் செல்வமும் அதிகரித்து செல்லும்.
ஜோதிடத்தை பொறுத்தளவில், இந்த செடி ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியான சுக்கிரனுடன் தொடர்புடையதாகும். எனவே இது நிதி பிரச்சினையை தடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |