எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம்?
அம்மன் என்பவர் இந்து சமயத்தில் பிரபஞ்சத்தின் படைப்பு, காப்பு, மற்றும் அழிப்புத் தொழில்களுக்கு காரணமான சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறார்.
அம்மன் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
அவற்றில் மாரியம்மன, துர்கை, காளி, மீனாட்சி மற்றும் காமாட்சி ஆகியவை சில முக்கிய வடிவங்கள் ஆகும்.
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால், தமிழகத்தின் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.
வீடுகளிலும் கோவில்களிலும் அம்மன் பக்திப் பாடல்களை ஒலிக்கவிட்டு வழிபடுவது மன அமைதியையும், ஆன்மீக சக்தியையும் தரும்.
அந்தவகையில், எந்தெந்த ராசிகள் அம்மனை வழிபாடு செய்யலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |