வெள்ளை அரிசி VS பழுப்பு அரிசி.., உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
Which Rice Is Better For Weight Loss- இந்தியாவில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவில் அரிசி முக்கிய இடம் பிடித்துள்ளது.
அரிசி நமது உடலுக்குத் தேவையான முக்கிய ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த ஒரு முதன்மை உணவாகும்.
ஆனால், உடல் எடை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்ற காரணங்களால் பலரும் அரிசி சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.
அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, சரியான அரிசி வகையைத் தேர்வு செய்து, அளவோடு சாப்பிடலாம்.

இந்தியாவில் பல்வேறு வகையான அரிசிகள் உள்ளன. அவற்றில் சில உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.
நாம் சாப்பிடும் உணவு ரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை குறிப்பது கிளைசெமிக் குறியீடு.
அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடும்.
வெள்ளை அரிசி அதிகமாகத் தீட்டப்படுவதால் அதில் உள்ள நார்ச்சத்து குறைகிறது. இதனால், சில வகை வெள்ளை அரிசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கக்கூடும்.
அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாதத்துடன் பருப்பு மற்றும் கீரை வகைகளைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
அந்தவகையில், உடல் எடை மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் 3 அரிசி வகைகள் குறித்து பார்க்கலாம்.

1. பழுப்பு அரிசி- பழுப்பு அரிசி குறைவாகத் தீட்டப்படுவதால், அதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைக்க உதவும்.
2. சிவப்பு அரிசி- சிவப்பு அரிசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும்.
3. கருப்பு அரிசி- கருப்பு அரிசியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது இதில் சில ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |