தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த சீரியல் எது தெரியுமா?
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீரியல் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
எந்த சீரியல்?
தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவர் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் சினிமா, சீரியல் உள்ளிட்டவை நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.
அந்தவகையில், உதயநிதி நண்பரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அகல்யா என்ற தொடரில் அன்பில் மகேஷ் நடித்துள்ளார்.
இந்த தொடரில் இவர் ஒரே காட்சியில் தான் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த காட்சி, தொடரின் டைட்டில் பாடல் காட்சிகளில் இணைக்கப்பட்டதால் தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக நேர்காணல் ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மேலும், "உன் நண்பன் என்பதால் ஒரே காட்சியில் நடித்ததை தினமும் ஒளிபரப்பு செய்வாயா? என்று உதயநிதியிடம் தயாநிதி மாறன் கேட்டதாகவும்" அவர் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |