இந்தியாவிலேயே மிகவும் வறுமையான மாநிலம்.., எது தெரியுமா?
இந்தியா பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட இந்நாட்டில், வெவ்வேறு மாநிலங்கள் உள்ளன.
மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
இந்தநிலையில், இந்தியாவிலேயே மிகவும் வறுமையான மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் போன்றவற்றினை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி 51.9 சதவீத வறுமையுடன் இந்தியாவின் வறுமையான மாநிலமாக பீகார் உள்ளது.
இதற்கு அடுத்த இடங்களில் ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா மாநிலங்கள் உள்ளன.

அதேநேரம் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கரில் வறுமை வேகமாகக் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
நாட்டிலேயே வறுமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்குக் கிடைத்திருக்கிறது.
அங்கு மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |