ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத இந்தியாவின் மாநிலம் எது தெரியுமா?
கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத இந்தியாவின் ஒரே மாநிலம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த மாநிலம்?
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் கொண்டவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
Post Office திட்டத்தில் தினமும் ரூ.333 முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
ஆனால், இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் உள்ள மக்கள் மட்டும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.
கடந்த 1975 -ம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியாக சிக்கிம் மாறியதில் இருந்து அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (26AAA) இன் கீழ் சிக்கிம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இங்குள்ள மக்களின் வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் ஆகிய அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
முக்கியமாக, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் கூட ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
இதன் காரணமாக சிக்கிம் மக்களின் நிதி நிலைமை மேம்பட்டு உள்ளது. அதாவது, மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள், முதலீடுகள் ஆகிய ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |