இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது குடிக்கும் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது குடிக்கும் மாநிலம் எது என்பதையும் அதை பற்றிய தகவலையும் பார்க்கலாம்.
எந்த மாநிலம்?
மது குடிக்கும் பழக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தாலும் பலரும் அதனை குடிப்பதை நிறுத்துவதில்லை. இப்போது நாம் பெண்கள் அதிகமாக மது குடிக்கும் இந்திய மாநிலம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகமாக மது குடிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டது.
அந்த ஆய்வின் படி அசாம் மாநிலத்தில் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 26.3% பேர் மது குடிக்கின்றனர். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மிக அதிகம்.
அதேபோல மேகாலயாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 8.7 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். இது அசாமை விட பின்னால் உள்ளது. இருந்தாலும் தேசிய சராசரியான 1.2 % விட மிக மிக அதிகமாகும்.
இதையடுத்ததாக அருணாச்சலப்பிரதேசத்தில் கடந்த காலத்தை விட பெண்கள் மது குடிப்பது குறைந்துள்ளது. இருந்தாலும் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 3.3 % பேர் மது குடிக்கின்றனர். இதே வயதுடைய ஆண்களும் 59% பேர் மது குடிக்கின்றனர்.
சிக்கிம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 0.3 சதவீதம் பேரும், சத்தீஸ்கரில் 0.2 சதவீதம் பேரும் மது குடிக்கின்றனர்.
இதில் சிக்கிம் மாநிலத்தில் 19.1% என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது. அதேபோல சத்தீஸ்கரில் 11.4 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |