இந்திய ராணுவத்திற்கு எந்த மாநிலத்தில் ஆயுதங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது?
இந்திய ராணுவத்திற்கு எந்தெந்த மாநிலங்களில் ஆயுதங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது என பார்க்காலம்.
இந்திய ராணுவ ஆயுத உற்பத்தி
உலகின் சக்திவாய்ந்த இராணுவங்களின் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.

14.80 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளதோடு, ஏவுகணைகள் ட்ரோன்கள் என சக்தி வாய்ந்த நவீன போர் கருவிகளும் இந்திய ராணுவத்தில் உள்ளது.
பல ஆயுதங்கள் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், ராணுவ உபகரண தயாரிப்பில் சுய சார்பு அடையும் நோக்கில் இந்தியாவிலும் ராணுவ உபகரணங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்திய ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாரிக்கப்படும் ஆயுதங்கள் அனைத்தும், மொத்தமாக குறிப்பிட்ட ஒரு பகுதியில் தயாரிக்கப்படுவதில்லை.
பல மாநிலங்களில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் இந்த பணியை செய்கின்றன.
உத்தரபிரதேசம் பாதுகாப்பு உற்பத்தியின் முக்கிய மையமாக உள்ளது. கான்பூரில் உள்ள ஃபீல்ட் கன் தொழிற்சாலை(Field Gun Factory) 1979 ஆம் ஆண்டு முதல் இராணுவத்திற்காக பீரங்கி மற்றும் வெடிமருந்துகளை தயாரித்து வருகிறது.

லக்னோவில் உள்ள பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 80 முதல் 100 சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய முடியும்.

இதே போல் மஹாராஷ்டிராவும் ராணுவ உபகரண தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாக்பூருக்கு அருகே உள்ள புல்ப்காவ்ன் ஆயுதக் கிடங்கில் இராணுவத்தின் மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளன.
தமிழ்நாட்டின் பங்கு
தென் இந்தியாவின் பாதுகாப்பு வழித்தட மையமாக தமிழ்நாடு அமைந்துள்ளது. கவச வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு இயந்திரங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
சென்னை அருகே உள்ள ஆவடியில் உள்ள CVRDE தொழிற்சாலையில், 1965 ஆம் ஆண்டு முதல் கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் அமைந்துள்ள BHEL, பீரங்கி வெடிமருந்து தொழிற்சாலையான happ , உள்ளிட்ட நிறுவனங்களும் ராணுவத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில், சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர் ஆகியவை இந்திய ராணுவத்திற்கு பல்வேறு ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்பில் முக்கிய நகரங்களாக உள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில், மேம்பட்ட ஏவுகணை அமைப்புகள், ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதே போல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), DRDO ஆய்வகங்கள் மற்றும் பாதுகாப்பு மின்னணு நிறுவனங்கள் உள்ளன.

இவை, போர் விமானங்கள், விமானப் போக்குவரத்து, ட்ரோன்கள் மற்றும் மின்னணு போர் அமைப்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறாக இந்திய ராணுவத்தின் தேவைகளை பல மாநிலங்கள் இனைந்து பூர்த்தி செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |