இந்திய இனிப்புகளின் அரசன் என்று அழைக்கப்படும் இனிப்பு..., எது தெரியுமா?
which sweet is called as the king of indian sweets- இந்திய உணவுகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, இந்திய இனிப்பு வகைகள் மிகவும் பிரபலமானவை.
லட்டு, ஜிலேபி, பால்கோவா, காஜு கட்லி எனப் பல இனிப்புகள் இருந்தாலும், மைசூர் பாக் இந்திய இனிப்புகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
மைசூர் பாக் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் உருவான பாரம்பரிய இனிப்பு ஆகும். இது மைசூர் அரச குடும்பத்துடன் தொடர்புடையது.

கடலை மாவு, சர்க்கரை மற்றும் நெய் ஆகிய மூன்று பொருட்களைக் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது.
மைசூர் அரண்மனையில் பணியாற்றிய சமையல்காரர் ஒருவர் முதன்முதலில் இந்த இனிப்பைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இது அரச குடும்பத்தினருக்குப் பிடித்த இனிப்பாக மாறிய, பின்னர், அரண்மனையைத் தாண்டி மக்களிடமும் பிரபலமடைந்தது.
நெய்யின் சுவையும் மணமும் இந்த இனிப்புக்குத் தனிச்சிறப்பை அளிக்கின்றன.

மைசூர் பாக்கின் சுவை மற்றும் தனித்துவமான அமைப்பு காரணமாகப் பலரும் இதை விரும்புகின்றனர்.
கர்நாடகாவில் முதலில் பிரபலமான மைசூர் பாக், பின்னர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரபலமடைந்தது.
தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் விரும்பி சாப்பிடப்படும் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றாக மைசூர் பாக் திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |