ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்ய முடியாத ஒரே ஒரு தமிழக மாவட்டம்.., எது தெரியுமா?
இந்தியாவை கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.
மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு ஆங்கிலேயர்களின் முக்கிய தலைமையிடமாக இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டம் மட்டும் கடைசிவரை ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் வராமல் இருந்தது.
அந்தவகையில், ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்ய முடியாத ஒரே ஒரு தமிழக மாவட்டம் புதுக்கோட்டை ஆகும்.

ஆங்கிலேயர்களால் நேரடியாக ஆட்சி செய்யப்படாத ஒரே பகுதியாக புதுக்கோட்டை இருந்தது.
இதற்கு அங்கிருந்த தொண்டைமான் மன்னர்களின் அரசியல் கூட்டணியே முக்கிய காரணமாகும்.
கர்நாடகப் போர்கள், பாளையக்காரர் போர்கள் மற்றும் ஆங்கிலேயர்-மைசூர் போர்களின்போது, தொண்டைமான் மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினர்.
இதனால், புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது.

1752ஆம் ஆண்டு ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் ஆட்சிக்காலத்தில், பிரெஞ்சு படைகள் மற்றும் சந்தா சாகிப்புக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
பின்னர், திப்பு சுல்தானுக்கு எதிரான போர்களிலும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. 1800ஆம் ஆண்டு துணைப்படைத் திட்டத்தை புதுக்கோட்டை ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் பாதுகாப்பை ஆங்கிலேயர்கள் வழங்கினாலும், உள்நாட்டு நிர்வாகம், நீதித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை சமஸ்தான அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்ததால், புதுக்கோட்டை நிர்வாகத்தில் அவர்கள் தலையீடு மிகவும் குறைவாக இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், புதுக்கோட்டை உடனடியாக இந்தியாவுடன் இணையவில்லை.
நிதி நெருக்கடி மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, 1948 மார்ச் மாதத்தில் புதுக்கோட்டை இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |