இந்திய ரயில்களின் ராஜா என்று அழைக்கப்படும் ரயில்.., எது தெரியுமா?
இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 22,593 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன என்று ஆய்வுகள் சொல்லப்படுகின்றன.
அந்தவகையில், இந்திய ரயில்களின் ராஜா என்று அழைக்கப்படும் ரயில் எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ரயில்களில் ராஜதானி எக்ஸ்பிரஸ்தான் இந்திய ரயில்வேயின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
ராஜதானி எக்ஸ்பிரஸ் அதன் வேகம், ஆடம்பரம் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

இது தேசிய தலைநகரான புது தில்லியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1969 மார்ச் 3ஆம் திகதி அன்று புது டெல்லியை ஹவுராவுடன் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைகளில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 130-140 கிமீ வேகத்தில் செல்கின்றன.
பயண நேரம் குறைவதோடு, நீண்ட பயணங்களிலும் கூட மென்மையான, அதிர்வு இல்லாத பயணங்களை வழங்குகின்றன.
இலவச உணவு, சுத்தமான துணிகள் மற்றும் 24 மணி நேர ஊழியர்களின் உதவி மூலம் பயணிகள் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள்.
இந்தியா முழுவதும் 20க்கும் மேற்பட்ட ராஜதானி வழித்தடங்கள் கொண்ட இது நாட்டின் மிக விரிவான சொகுசு ரயில் சேவைகளில் ஒன்றாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |