இந்தியாவில் மாந்திரீகத்திற்கு பெயர் பெற்ற கிராமம்.., எது தெரியுமா?
which village is called capital of black magic in India- இந்தியாவில், மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியத்திற்குப் பெயர் பெற்ற ஒரு கிராமம் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் மாயோங் கிராமம் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் "கருப்பு மந்திரத்தின் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக மாந்திரீக மரபுகள், பழங்கால மருத்துவ முறைகள் மற்றும் மர்மமான நாட்டுப்புற கதைகளுக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.

அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் மாயோங் கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தின் பழமையான மரபுகள் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
மாயோங் கிராமத்தில் பல தலைமுறைகளாக மாந்திரீகம் மற்றும் பாரம்பரிய ஆன்மீக சடங்குகள் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இங்குள்ள சிலர் கைரேகை பார்ப்பது, எதிர்காலத்தைக் கணிப்பது மற்றும் நோய்களைக் குணப்படுத்தும் பாரம்பரிய சடங்குகளைச் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
மாயோங் கிராமத்திற்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் பல நாட்டுப்புற கதைகள் கூறுகின்றன.

மகாபாரதத்தில் வரும் பீமன் மற்றும் இடும்பியின் மகனான கடோத்கஜன், இந்த பகுதியில் மாய வித்தைகளை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.
மாயோங் கிராமம் தற்போது மர்மமான வரலாறு மற்றும் பழங்கால மரபுகளை அறிந்துகொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இங்குள்ள மாயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் வணிக வளாகம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
இங்கு பழங்கால கையெழுத்து பிரதிகள், ஆயுர்வேத நூல்கள், தாந்திரீக மரபுகள் மற்றும் கிராமத்தின் வரலாறு தொடர்பான தகவல்கள் உள்ளது .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |