இந்தியாவில் முதன்முதலில் திறக்கப்பட்ட ரயில் நிலையம்: எது தெரியுமா?
பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் முதல் ரயில் நிலையம் எந்த ஊரில் நிறுவப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அந்தவகையில், இந்தியாவின் முதல் ரயில் நிலையம் மும்பையின் கிழக்கு கடற்கரையில் நிறுவப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஏப்ரல் 16 அன்று தானே வரை ஓடியது.
இந்தியாவின் முதல் ரயில் நிலையம் போரி பந்தர். போரி பந்தர் என்ற பெயர் மராத்தி வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது.
இந்தியாவின் முதல் நிலையத்தின் திறப்பு விழாவிற்கு முன்பு, 18 நவம்பர் 1852 அன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த ரயில் நிலையம் 1853 ஏப்ரல் 16 அன்று ஆங்கிலேயர்களால் முறையாகத் திறக்கப்பட்டது. அன்றைய தினம் பம்பாய் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயில் 14 பெட்டிகள் கொண்ட 400 பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயில் ஆகும்.
1888ஆம் ஆண்டில் போரி பந்தர் ரயில் நிலையம் இடிக்கப்பட்டு, விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப்படும் ஒரு பிரமாண்டமான புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
1996ஆம் ஆண்டில், இது சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று மும்பையின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் இதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |