வேண்டுதலை நிறைவேற்றாத கடவுளுக்கு தண்டனை கொடுக்கும் இந்திய மாநிலம் எது?
மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களுக்கு இந்திய மாநிலம் ஒன்றில் தண்டனை வழங்கப்படுகிறது.
எந்த மாநிலம்?
பொதுவாகவே மனிதர்கள், தான் நினைத்தது ஏதாவது நடக்கவில்லை என்றாலோ, ஏதாவது ஒரு தேவை இருக்கிறது என்றாலோ, கஷ்ட காலம் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் தான் குறைகளை சொல்வார்கள்.
அதில் சில விடயங்கள் நடப்பதுண்டு, சில விடயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதாவது, பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களை கூண்டில் ஏற்றி தண்டனை வழங்குகிறார்கள்.
மேலும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தெய்வங்களை கோவில்களில் இருந்து அகற்றுவதோடு, கோவில்களுக்கு பின்புறம் மரத்தடியில் வசிக்க வைக்கின்றனர்.
பின்னர், தண்டனை காலம் முடிந்த பிறகு கோவில்களுக்குள் அந்த தெய்வங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை சத்தீஷ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் இந்த மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள பங்காரம்மன் கோவிலில் திருவிழாவின் போது வேண்டுதல்களை நிறைவேற்றாத தெய்வங்கள் மீது குற்றம் சுமத்தலாம். அங்கு, கடவுளின் நீதிமன்றத்தில் கிராம தலைவர்கள் தான் வழக்கறிஞர்களாக உள்ளனர். பறவைகள், விலங்குகள் தான் சாட்சியாளர்களாக உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |