சுற்றிவளைத்த பொலிசால்... ஆற்றில் குதித்த லண்டன் இளைஞரின் பெயர், புகைப்படம் வெளியானது
பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய அந்த இளைஞர் தேம்ஸ் நதியில் குதித்ததில் மரணமடைந்துள்ளார்
கிங்ஸ்டன் பிரிட்ஜில் ஒரு ஆணும் பெண்ணும் வாய்த் தகராறில் ஈடுபடுவதை அறிந்து பொலிசார் விசாரிக்க முடிவு
தென்மேற்கு லண்டனில் வெள்ளிக்கிழமை பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தேம்ஸ் நதியில் குதித்து மரணமடைந்த இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய அந்த இளைஞர் தேம்ஸ் நதியில் குதித்ததில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஃபில்பி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது Liam Allan என்பவரே வெள்ளிக்கிழமை சுமார் 10.30 மணியளவில் பொலிசாரிடம் தப்பிக்க தேம்ஸ் நதியில் குதித்தவர்.
@Handout
இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, Liam Allan தேம்ஸ் நதியில் குதித்துள்ளார்.
முன்னர் மது அருந்தும் பழக்கம் இருந்தாலும், தற்போது அதில் இருந்து மீண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று கிங்ஸ்டன் பிரிட்ஜில் ஒரு ஆணும் பெண்ணும் வாய்த் தகராறில் ஈடுபடுவதை அறிந்து பொலிசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
விசாரணையில், திருட்டு தொடர்பான வாக்குவாதம் என தெரியவர, பொலிசார் அந்த இளைஞரை கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் பொலிசாரிடம் இருந்து தப்பிய அந்த இளைஞர் சட்டென்று நதியில் தவறி விழுந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
@Handout
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் இறுதியில், சுமார் 12.30 மணியளவில் மரணமடைந்துள்ள நிலையில் இளைஞரை சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சம்பவத்தின் போது பதிவான காணொளி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்தகட்ட விசாரணை தொடர்பில் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.